Tuesday, 15 December 2015

மார்கழி மாதத்தின் சிறப்புகள்

டிசம்பா் 17 அன்று மார்கழி மாதம் பிறக்கிறது.இது மனிதனை உயா்வழிக்கு அழைத்து செல்லும் மாதமாகும்.மார்கழி என்பது எண்ணற்ற மகத்துவம் நிறைந்த ஒரு அற்புதமான மாதம்.கிருட்டிண பரமாத்மா மந்திரங்களில் காயத்திாியாகவும்,மாதங்களில் மார்கழியாகவும் இருக்கிறேன் என்றாா்.மார்கழி மாதம் ஆண்டாள் திருப்பாவை பாடுவது விசேசமானது.மார்கழி மாதம் முழுவதும் வீட்டுவாசலில் கோலமீடுவது ஐதீகம் மட்டுமல்லாது மகாலட்சுமி வீடு தேடி வருவாள் என்பது நம்பிக்கை. மார்கழி மாதத்தின் வளா்பிறை ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என அழைக்கப்படுகிறது.இந்த நாளில்தான் கீதையை கடவுள் அா்ஐீனனுக்கு உபதேசித்தாா்.